அந்திமழையும் ஐம்பூதங்களும்

நீலநிற ஆகாய ஆடவனும்...
நிலமகளாகிய வையகவனும்...
ஒருவர் மீது ஒருவர்....
தீராக் காதல் கொண்டனர்...

ஒர் சமயம்...
அவர்கள் இருவரின்
காதலில் ஊடல் என்னும்
அரண் ஒன்று வந்தது....

இருவரும்....
சுட்டெரிக்கும் நெருப்பாய்
கோபம் கொண்டு இருந்தனர்...

அதைக் கண்ட
தென்றல் காற்று...
இருவருக்கிடையே
தூது செல்ல...
ஏமாற்றமே மிஞ்சியது...

அதில் ஆத்திரம் கொண்ட
இளம் தென்றல் காற்று...
புயலாய் வீசிட....

அதைக் கண்டு...
பயம் கொண்ட
கார்மேகங்கள்....
ஒன்றோடு ஒன்று முட்டி...
அணைத்து கொண்டன...

அதன் விளைவு தான்...
இந்த அந்த அந்திமழையின்
கண்ணீர் துளிகள்....

கடைசியில்....
ஆகாயமும்... வையகமும்...
தங்களை முத்தமிட்டு செல்லும்...
மழை நீரால்...

அவர்களின்
அரணை உடைத்து....
கோபத்தீயை போக்கி கொள்ள...

ஊடலை மறந்து...
மீண்டும்...
காதல் செய்தனர்...

எழுதியவர் : கனி (13-Feb-21, 1:22 pm)
சேர்த்தது : Kani
பார்வை : 155

மேலே