சீண்டுவாள் மீண்டும் விழியாள்
மீண்டும் சிவக்கும்இக் கீழ்வானம் பொன்னெழிலாய்
மீண்டும் திறந்திடும் பூக்களின் பூங்கதவு
துள்ளி வரும்நீரோ டையில்துள் ளும்கயல்கள்
துள்ளும் இவள்விழி யில் !
மீண்டும் சிவக்கும்இக் கீழ்வானம் பொன்னெழிலாய்
மீண்டும் திறந்திடும் பூங்கதவு --தீண்டிடும்
தென்றல் குளிரோடை யில்துள்ளி டும்கயல்கள்
மின்னுமிவள் கண்ணில்துள் ளும் !
---முறையே இரு விகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்
மீண்டும் வருவாள்மென் காலையில் பூப்பறிக்க
மீண்டும் சிவக்கும்இக் கீழ்வானம் பொன்னெழிலாய்
மீண்டும் திறந்திடும் பூக்களின் பூங்கதவு
மீண்டும் பறிப்பாள்நெஞ் சை
மீண்டும் சிவக்கும்இக் கீழ்வானம் பொன்னெழிலாய்
மீண்டும் வருவாள்பூ வைப்பறிக்க -சீண்டுவாள்
மீண்டும் விழியால்பா ராததுபோ லேநடிப்பாள்
மீண்டும் பறிப்பாள்நெஞ் சை
---முறையே ஒரு விகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்
கவிப்பிரிய சக்கரரைவாசன் பரிந்துரை வழி அமைத்த பாக்கள்