அரிதானவள் அறிவானவள்

அரிதானவள் அறிவானவள்
==========================

கிள்ளையுடன் பேசுவதாய் தெரிகிறது
என் முல்லையிடம்
நான் பேசும் பொழுதுகள்..

வழி தானே கேட்டார்
எதற்கவரை விழி பிதுங்க வைத்தாய்
உளி கண்ணெடுத்து
அவர் மனம் செதுக்கி
வலி கொடுத்தது போதும்
சீக்கிரமாய் உள்ளே போ..

சிலர் சிரித்தால் அழகு
சிலர் அழகாய் சிரிப்பர்..
ஆனால் என் முன்னே
ஒரு அழகே சிரிக்கிறது..

உறங்கச் சென்றவனை
கஷ்டப்படுத்துவதே உன் வேலை
என் கனவில் உனக்கென்ன வேலை!?

விட்டுவிடு பாவம்..
கொட்டி விட்ட புன்னகையை
அப்படியே விட்டுவிடு
நானெடுத்து சேமித்து வைத்துக்கொள்கிறேன்..

துன்பம் தரும் உலகில்
அரிதான இவ்வின்பம்
தினம் வேனும்
உன் போல் சிரிக்கின்ற மனம் வேனும்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Feb-21, 6:56 pm)
பார்வை : 4189

மேலே