சம்யுக்தா- கவிதை

இளமை எனும்
மூன்றெழுத்துக்கு
விதிவிளக்காய் இருப்பவளே,
தாய்மைக்கு தகுதி பெற்று
தத்தளிக்கும் உன் குழந்தையை
தோளில் சுமப்பவளே,
தோற்கும்போதெல்லாம் தோற்கடிக்கும்
சூத்திரம் கற்றவளே,
தப்பை தட்டிக்கேட்க
தைரியம் படைத்தகவளே,
கண் இமைக்கும் நொடிகளில்
சர்ச்சயை எதிர்பவளே,
இடத்திற்கேற்ப மாறாமல்
உண்மை முகத்தை காட்டியவளே,
எதிர்த்து நின்றால்
எதிரிகள் கூட
பயந்தொடுவார்கள் என
எடுத்துக் காட்டியவளே!
உனது வெற்றிக்கு
வாழ்த்துக்களோடு நான்!

எழுதியவர் : கீர்த்தனா (21-Feb-21, 1:05 pm)
சேர்த்தது : Keerthu
பார்வை : 46

மேலே