இதயப்பூ

பதுமையாய் நீ இருந்தாலும்
புதுமையாய் உன்
இதயப்பூஞ்சோலையில் -என்
தரிசனத்தண்ணீரால்
புத்தம் புதிய காதல் பூ
பூத்திருக்கின்றது
காத்திருக்கிறேன் -அந்தப்பூ
காற்றுடன் கலந்து
கமகமக்குமென்று -இல்லை
வாடியாவது விடுமென்று
பூமரப்பூ எனின்
பூக்களுடன் பூர்வீகம் பேசும்
தென்றலையாவது செய்தி
கேட்டிருக்கலாம்
ஆனால் இது உன்
இதயத்தின் பூ அல்லவா !!

எழுதியவர் : நிரோஷனி றமணன் (23-Feb-21, 10:36 pm)
சேர்த்தது : நிரோஷனி றமணன்
பார்வை : 103

மேலே