Father’s day
2017ம் ஆண்டு. காந்திமதி நானும் நியூயார்க்கில் ஶ்ரீவித்யா-ஶ்ரீராம் வீட்டில் தங்கி இருந்தோம். நாங்கள் வார இறுதியில் ஊரைச்சுற்றிப்பார்க்க வெளியே செல்வது வழக்கம்.
அப்படி ஒரு நாள் செல்லும்போது ஶ்ரீராம் “ நாளை Father’s Day “ என்று கூறியவுடன்,
காந்தி தன் பாணியில் “ அப்படியா? எத்தனையாவது வருடம்?” என்று கேட்டாள்.
ஶ்ரீராமுக்கு ஒன்றும் புரியவில்லை. எத்தனையாவது வருடம்னா, வருஷா வருஷம்தான்” என்று சொல்ல,
“ அது தெரியும் “ உன் தகப்பனார் எந்த வருஷம் இறந்தார்?” என்று கேட்க,
“இதை ஏன் நீங்க கேக்கறேள்?” என்று அவர் வினவ,
“ இல்லை , நாளைக்குத் திதின்னா அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டேளா? சாஸ்திரிகள் யாரு? எந்த இடத்திலே? இதை எல்லாம் தீர்மானம் பண்ணிட்டேளா? என்று வெகுளியாகக் கேட்கவே,
ஶ்ரீராம் ஒரு நிமிஷம் திகைத்துப்போய், “ “Fathers day”ன்னா, நீங்க நினைக்கிற மாதிரி “ அப்பாவோட திதி நாள் இல்லே. இங்கே வருஷா வருஷம் ஜூன் மாதம் மூணாவது ஞாயத்துக்கிழமையை அப்பாக்களுக்கு மரியாதை செலுத்தறதுக்காக இந்த தேசத்துலே கொண்டாடுவா. அதே மாதிரி Mothers Day ஐ மே மாசம் ரெண்டாவது ஞாயறு அண்ணிக்கிக் கொண்டாடுவோம்” என்றார்.
“வருஷத்துக்கு ஒரு நாள் அம்மா, அப்பாவை ஞாபகப்படுத்திப்பாளாக்கும். நம்ம ஊர்லே Fathers day, Mothers Day ன்னா எல்லாரும் திதியைத்தான் சொல்வா “ என்று சொல்ல, எங்களுக்கு ஒரே சிரிப்பு.