ஹைக்கூ

வாட்டி வதைத்தாலும்
வரம் கொடுக்கும் தெய்வம்
அம்மா

சிறைவைத்து பூட்டினாலும்
வெளியில் வந்துவிடுகிறது
மல்லிகைப்பூ வாசம்

பறவைகளின் மாநாடு
இலவசப் பந்தல்
மரங்கள்

புல்லின் மீது
திரவ வைரங்கள்
பனித்துளிகள்

உதிரும் பூக்களுக்கு
பிரியா விடைகொடுக்கிறது
மரங்கள்

அரசன் இல்லை
மகுடம் செய்யும் கொடுங்கோலாட்சி
கொரானா

வின்னையும் முகிலையும்
தொட்டுப் பார்க்கிறது
பெட்ரோல் விலை

நத்தை நகர்ந்த
வழியெல்லாம்
பட்டு இழைகள்

தண்டவாளத்தில்
பூங்கொத்து
விலைவாசி உயர்வால்
மக்கள்.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Mar-21, 6:40 am)
Tanglish : haikkoo
பார்வை : 121

மேலே