நம்மையே நாமும்
இறந்துவிடும் நாளை நோக்கியே விரைந்து
இடைப்பட்ட காலங்களில் கறைபடிந்து
வெல்லமுடியா பெரும் ஆசைகளில் வீழ்ந்து
சொல்லமுடியா வலிகளை பலவகையில் கடந்து
வாழ்க்கையின் பாதையை மாற்றவே முயன்று
வம்புகளால் பற்வகை துன்பங்களில் உழன்று
நம்மையே நாமும் ஒருவகையில் மறந்து
நவ துவாரங்களும் கோப நெருப்பில் கனன்று
கண்ணியத்தை காசு சேர்க்கவே இழந்து
கக்கியதை உண்ணும் நாய் போலவே உண்டு
சிற்றின்ப உணர்வினால் பல வேலைகளை துறந்து
பகடைக்காய் ஒத்த நிலையில் செல்லும் வாழ்வை
பக்குவமாய் வாழ பழகியவனே சிறந்த மனிதனாம்.
----- நன்னாடன்.