மகளிர் தினம்

அன்புக்கு அடையாளமாய் பெண் !!
ஆறுதலுக்கு அஸ்திவாரமாம் பெண் !!

இன்னல்களுக்கு எடுத்துக்காட்டாக பெண் !!
ஈரம் மனம் படைத்தவளாம் பெண் !!

உயிரையும் கொடுக்க துணிந்தவளாம் பெண் !!
ஊனம் என்று பேரெடுத்தாலும் ஊன்றி நிற்பாளாம் பெண் !!

எத்தனை துன்பத்தையும் கடப்பவளாம் பெண் !!
ஏழ்மையை உடைத்து எரிவாளாம் பெண் !!

ஐந்து அறிவையும் ஆயுதமாக கொண்டவளாம் பெண் !!

ஒன்றும் அறியாதவளாய்.....
ஓரம் கட்டி நிற்கிறாள் .....

ஔவியம் பேசுகிறது ......

பெண்ணுக்கு என்று ஒரு தினமாம்
பெருமை பேசுகிறது இந்த உலகு .....

எழுதியவர் : R.THEIVANAI (8-Mar-21, 1:30 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : makalir thinam
பார்வை : 148

மேலே