வேட்பாளர்கள் - பதவிகள் - இணைக்குறள் ஆசிரியப்பா

அடுப்பென எல்லாக் கட்சிகளும் இருக்க
விறகாய் தொண்டரும் செயல்பட
கலனென வேட்பாளர் களமிறங்க
பண்டமாய் பதவிகள் வெற்றிக்குபின்
விறகுக்கு எப்பலனும் இல்லையே
கலனோ சிதைவினும் விலைபோகும்
அடுப்பெது எனினும் நற்கலன்
கிடைத்தால் விறகுகள் தயாராகவே
பண்டங்கள் என்றும் பணத்திற் காகவே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Mar-21, 6:48 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 422

மேலே