தொப்பை

நாவிற்கும்  உணவிற்கும்
இருக்கும் உறவின்  சிறப்பை 
ஊருக்கும் எவ்வுயிருக்கும்
உணர்த்தும் சின்னம் தொப்பை..

ருசியான உணவு 
பசி போக்கின் அது சரி..
பசி பறந்த பின்னும் - வெறும் 
ருசிக்காக உணவை உண்டால் அது வெறி!

எஞ்சும் உணவு வீணாகுவதை - பசியால் 
கெஞ்சும் உயிருக்கு  கொடுத்திடு 
நெஞ்சில் மலரும் நல்லுணர்வை ருசித்திடு.
மிஞ்சும் நாட்களிலேனும் அளவு இகுதென பழகிடு. 

ஓடு  ஆடு விளையாடு 
தொலைதூரம் நடைபோடு 
தொல்லை தரும் 
தொப்பைக்கு தொல்லைகொடு!!

தினேஷ் காளிமுத்து 

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (14-Mar-21, 10:00 am)
பார்வை : 52

மேலே