சிட்டுக்குருவி தின வாழ்த்துகள் - வஞ்சி விருத்தப் பா

சட்டெனப் பறந்துச் சென்று
பட்டென ஓரிடத்தில் அமரும்
கிட்டுமென அதனருகே சென்றால்
தட்டுப்படாமல் விரைந்து மறையும்

தட்டில் நிறைய உணவிட்டு
எட்டிய இடத்திற்கு அழைத்து
முட்டியும் மோதியே ஓடினாலும்
தட்டுப்படாமல் விரைந்து பறக்கும்

மாட்டும் என்றே எண்ணி
தோட்டத்து தானியத்தை தூவியே
வீட்டில்வைத்து தூரத்தில் சென்று
நோட்டமிட்டால் வந்து உண்ணும்

காட்சிக்கு பார்க்க அழகாய்
பாட்டில் எழுத சிறுகுருவியாய்
நாட்டின் நடப்பை அறியாமல்
கூட்டில் எழிலாய் வாழும்

சிட்டுக் குருவிகள் இனத்தை
கட்டிக் காக்கும் வகையில்
திட்டமிட்டாலே வாழும் உலகிலினி
சிட்டுக்குருவி தின வாழ்த்துகள்.
÷÷÷÷÷÷÷÷ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Mar-21, 7:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 179

மேலே