பரிதாபம் துளியளவும்
கலித்தாழிசை பா
உடன்படா கருத்தோடும்
உருண்டோடும் காலத்தோடும்
ஒருங்கிணையா எண்ணத்தோடும்
நிலையில்லா மக்களோடும்
இணைந்து இயங்குவதே வாழ்க்கை
நல்லவன் என்பதை
நல்லவன் சொன்னால்
நம்புவதில்லை இந்த
நல்லுலகத்தில் வாழ்கின்ற
நல்லுள்ளம் படைத்த மாந்தர்களே
வல்லவன் வார்த்தைகள்
வானத்திலும் உயர்ந்து
என்றெண்ணி வாழும்
மாந்தர்கள் கூட்டத்தில்
வாழுவதென்பது பிறவியின் பாபமே.
கடமைக்கு எதனையும்
கடமையென்று செய்திடும்
கடமையாற்றுவோர் வாழ்வினில்
கடன்படுதல் என்பது
காட்டாற்று வெள்ளமாய் சேர்ந்திடுமே
பணத்தினில் நாட்டம்
பகட்டினில் மோகம்
பரிதாபம் துளியளவும்
கொள்ளாத மனிதர்களின்
பார்வையில் விலகல் இறையருளே.
-------- நன்னாடன்