ஆட்சியைக் கைப்பற்ற

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆட்சியைக் கைப்பற்ற ஆவலை தூண்டுக
ஏளனிப் போர்களின் முகத்தை மறந்திடு
எப்படி ஆயினும் உறுதியாய் தொடர்க
கொஞ்சமும் அஞ்சுதல் தவிர்க்கவும்
உடலின் நலத்தை காக்கவும்
உரிமையை மீட்கவே பிறந்ததாய்
உன்னையே உனக்குள் கண்டிடு
உயர்ந்ததாய் இலக்கு உனக்காய் உள்ளது
என்றே முனைந்திடு தொடர்ந்து
படுகுழி கெடும்வழி எனவும்
ஏமாற்று பொய்யுரை பழிகள்
பலவும் புலப்படும் பாதையில்
பயங்கொல் எதனையும் கேட்டுகொள்
விழுந்த உடனே எழுந்திடு
வலிமை மிகுந்த நபரிடம்
பதுங்கியே சென்று இலக்கடை
கற்றுத் தெளிந்து முடிவெடு
வெற்றுப் பேச்சை விடுவி
உதவுவோர் இடத்தில் மெளனியாய்
என்றும் நன்றியைப் பேணுக
இலக்கை அடைந்ததும் கொள்கையை செய்வாய்.
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Apr-21, 9:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே