காரணமே தெரியாமல்

ஆளுவோரை ஏளனமாய் பேசுவதும்
காசுக்காக அவச்செய்கைச் செய்வதும்
காரணமே தெரியாமல் சினம்பல கொள்வதுவும்
கணக்கின்றி துர்செய்கைகளை காப்பதுவும்
பிணக்கின்றி யாவரோடும் ஒத்துப்போவதுவும்
நியாயங்களை காக்காமல் வாழ்வதுவும்
நம்பியோருக்கு எதிராகவே மாறுவதுவும்
பழிவாங்க கொலைப்பழியைச் செய்வதுவும்
பணத்திற்காக பழைமைகளை சிதைப்பதுவும்
மிரளும்படி பாழ்செயல்களால் ஏவுவதும்
ஊரே எதிர்க்க ஒருபுறமாய் இருப்பதுவும் - இது
அறிவில் சிறந்த மானிடரின் திறமையில்லை
பாம்பினது பல் நஞ்சுபோல் பிணைந்திருப்பின்
பாதிப்பென்று வரும்போதே வெளிப்பட்டால்
பாரின் நிலை என்றுமே மாறாதே.
~~~~~~ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Mar-21, 10:31 am)
பார்வை : 70

மேலே