நீயா இல்லை நானா
நான் சொல்வதெல்லாம்
உண்மை ...
உண்மையை தவிர
வேறு ஒன்றுமில்லை ...!!
அரசாங்க நீதிமன்றத்தில்
கூண்டில் ஏறி
நான் செய்த சத்தியம் ...!!
என் மனச்சாட்சிக்கு
நன்கு தெரியும் ...
என் வறுமைப்பசிக்கு
காசு வாங்கிக்கொண்டு
நான் சொன்னதுயெல்லாம்
பொய் சத்தியம் என்று ...!!
என் உள்மனம் கூறியது
இதற்கு தண்டனை
நிச்சயம் உண்டு
ஆண்டவனின் நீதிமன்றத்தில் ..
.
ஆனால்...
என் மனச்சாட்சி
இறைவனிடம் வாதம் செய்தது
இந்த நிலைக்கு யார் காரணம்
என்னை படைத்த
ஆண்டவனே பதில் சொல் ...
நீயா ...இல்லை நானா ...??
--கோவை சுபா