தாய்மொழி

அன்னைமொழியே
அழகு சித்தரமே
தொல்காப்பியம் தந்த தொண்மையே
பதினான்கு மொழி கண்ட பாரதிக்கு கூட உன்மேல் தான் பைத்தியமாம்

செம்மொழி என்ற பெருமை மட்டுமில்லை நீயே உயர்தனிச்செம்மொழியும் ஆவாய்


௨௪௭ எழுத்துக்களை கொண்டு என்னை இயக்குபவல் நீ
முச்சங்கம் கண்ட மூத்தவலும் நீ
காரைக்குடியில் கற்கோவில் கண்ட காவியம் நீ

ஒற்றை சொல்லில் ஒரு நூறு
பொருட்கள் கொடுக்க உன்னால் மட்டுமே முடியும்
ஒரு பொருளை குறிக்க ஓராயிரம் சொற்களும் உன் கைவசம்

இந்தியாவிலே முதலில் காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடபட்ட மொழி என்ற கம்பீரமும் உன்னிடத்தில்
என் வாழ்வின் ஆதி தொடங்கி
அந்தம் முதல் உன் மடியில் நான்

எழுதியவர் : தீபிகா. சி (23-Mar-21, 4:53 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : thaaimozhi
பார்வை : 265

மேலே