காதலின் ஏக்கம்

உன்னைக் கண்ட நாள் 

இன்னும் என் நினைவில் 

கைப்பேசியில் தொடர்பு கொண்டாய்

திகைத்து நின்றேன் உன் துணிச்சலால்

ஒரு மாத இடைவெளியில் 

பகிர்ந்து கொண்டவை இரகசியங்கள் அல்ல 

உன்னை பற்றிய புரிதலை வளர்த்தவை

நான் இருப்பேன் என்ற நம்பிக்கை 

அது அனைத்திலும் மேலோங்கியது

இன்பத்தில் தொடங்கியது பயணம் 

இன்றும் அவை மறக்க இயலாதவை 

இடைவெளி ஏன் எனப் புரியவில்லை 

அதை குறைத்து விடடா முடிந்தால் 

எதிர்பார்ப்புகள் எல்லாம் ஓரம் வைத்தேன் 

உன் நிழலடியில் நின்று விட நினைத்தேன் 

தள்ளி இருக்கச் சொல்லாதே

ஆயிரம் பேர் வந்தாலும் உன் இடத்தை தர இயலாது 

நினைத்து நெகிழ நான் கனவல்ல 

உன் காதலைப் பெற போராடும் பேதை

கனவுகளில் உன்னுடன் வாழ்ந்த தருணங்கள் 

என்றும் என் கண்முன் தவழ்ந்திடும்

நிச்சயமில்லாத வாழ்வில் நீ வேரூன்றி நின்றாய் 

நினைத்து பெருமை கொள்ள ஏதுமில்லை 

எனினும் மனம் உன்னை பற்றிக் கொண்டது 

இதற்கு காதல் என பெயர் சூட்டவா

உன் இயல்பைத் தொலைத்து நின்றாய் 

அருகே இருந்தும் தூரமாய்ப் போனாய்

சிறிதேனும் சிந்தனை கொள்வாயா என்னை எண்ணி

ஆவலாய் உன் இறுக்கத்தை விரும்பினேன் 

விலகி மட்டுமே சென்றாய் 

செய்வதறியாது குழப்பம் கொண்டேனே தவிர 

கொண்ட காதலை மாற்றவில்லை 

உன்மீது கொண்ட என் காதலும் நானும் 

என்றும் உன் சிந்தனைகளுடன் காத்தருப்போம்

என் காதலும் ஒருநாள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று…. 

எழுதியவர் : இந்துமதி (2-Apr-21, 9:27 pm)
சேர்த்தது : indhumathi
Tanglish : kathalin aekkam
பார்வை : 84

மேலே