அவளின்றி....

பெண்ணே!
நீ
என் முகத்தை காட்டும்
கண்ணாடி அல்ல
என் மனதை காட்டும் கண்ணாடி.....

உன்னையே!
என் லட்சியமாக
நினைத்திருக்கும்
என்னை
நீ
அலட்சியம் செய்துவிட்டு போகிறார்...

பொருள்
இல்லாமல் போனால் மட்டுமல்ல
நீ இல்லாமல் போனாலும்
எனக்கு
இவ்வுலகம் இல்லை....

பசியால் வாடும்
உயிர்களுக்கு மத்தியில்
என்னுயிர்
உன் பார்வைக்காக வாடுதடி...

உன்னைப்பற்றி
நான் எழுதும்
ஒவ்வொரு கவிதைகளும்
உன்னால் காயம் பட்ட
என் இதயத்திலிருந்து
கசிந்து வரும்
ரத்தச் சொட்டுகள்....

உன் பார்வை
கிடைக்கும்வரை
என் பார்வை
எனக்கில்லை...

எனக்கு
பிரை ஏறினால் கூட
என் மனம்
மகிழ்ச்சி அடைகிறது
திட்டியது
நீயாக இருக்குமோ என்று...

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Apr-21, 7:01 pm)
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே