மீமிசையானே

நேரிசை ஆசிரியப்பா


தமிய னாகிப். போனான் இன்றைய
தமிழனும் யிஃதுண் மையே சொல்லும்
சிமிழில் தமிழமிழ் தன்னை தந்தாள்
நிமிர்ந்த தமிழ னாக்கி விட்டபின்
திமிராய் நீயும் சேர்ந்தாய் எம்மையும்
துமித்து விட்டாய் நம்கலா சாரமும்
நிமிரல் யீய மாறுவை மதமும்
உமியென மணிதகர்ந் தோடினார்
இமிழ்வார் பின்போ னதேன்மீ . மிசையானே


தமிய -- தனி. துமித்து -- வெட்டிவிட்டு
நிமிரல் -- சோறு இமிழ் -- ஆரவார ஒலி


.......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Apr-21, 9:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 48

மேலே