இசையை காதல் செய்

கோடை வெயில் கொளுத்தும் போதும்
மாலை மழையில் நனையும் போதும்
தாலாட்டுப் பாடல் பாடும் போதும்
இறங்காட் பாக்கள் பாடும் போதும்
தென்றலாய் காற்று தீண்டும் போதும்
புயலாய் மாறி வீசும் போதும்
மகிழ்ச்சியில் மனம் திளைக்கும் போதும்
துயரத்தில் உள்ளம் துன்புறும் போதும்
காலையில் கண் விழிக்கும் போதும்
இரவில் உரங்கப் போகும் போதும்
கனவில் கூட தொடரும் ஒன்று
நினைவில் நல்ல இனிமை என்று
" இசையை காதல் செய் "

எழுதியவர் : சூ.ஜெ. பவித்ரா (21-Apr-21, 10:44 am)
சேர்த்தது : Pavithra
பார்வை : 3966

மேலே