பள்ளி நினைவுகள்

கழுத்த சுத்தி கையால காத தொட்டுக்காட்டி அரசாங்க பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது....... வேக வேகமா சாப்டுட்டு கெளம்பி,நண்பனோட சேர்ந்து
கால்கடுக்
க நடந்து பள்ளிக்கூடம் போனபோது.......
சொந்தமா சைக்கிள் வாங்கின ஒடனே வழக்கமா நம்ம கூட நடந்து போற நண்பன நம்ம சைக்கிள்ல ஏத்திக்கிட்டு பள்ளிக்கூடம் போனபோது.........
புது சைக்கிள் வாங்குனத க்ளாஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லி பெருமை பட்டபோது......ப்ரேயர்ல நிக்கையில யார் அதிக ஒயரம்னு பாத்து சந்தோசப்பட்டபோது......பல்கலை கழகமா மாறி பாடம் சொல்லி தந்த வாத்தியார்களுக்கே பட்டங்கள் கொடுத்த போது.......இங்க் பேனா எழுதலன்னதும்,பிளேடால கீறி அத எழுத வச்சு,ஒரு விஞ்ஞானியா நம்மள உணர்ந்தபோது.........வாட்டர் டேங்க் குழாய் தண்ணி கைல ஊத்திக்கிட்டிருக்கும்போதே வாய் வச்சு குடிச்சு பாதி சட்டைய நனைச்சுகிட்ட போது.......பேசுரவங்க பேர
லீடர் போர்டுல எழுதுறப்ப,நண்பன் கிட்ட பேசவேண்டியத மாத்திமாத்தி பேப்பர் ல எழுதிகுடுத்து பேசிக்கிட்டபோது........டீச்சர் ஹோம் ஒர்க் நோட் திருத்தி குடுக்குறப்ப நம்ம பேரு வர்றதுக்குள்ள பெல் அடிச்சிடனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்ட போது......பென்சில சீவி சுடுதண்ணில போட்டுட்டு அது ரப்பரா மாறியிருக்கும்னு நெனச்சு மறுநாள் அத தெறந்து பாத்தபோது.......ஒரு நோட்டுல மார்ஜின் போட ஸ்கேல் இல்லாதப்ப,இன்னொரு நோட்ட ஸ்கேலா மாத்தி மார்ஜின் போட்டபோது.........வாத்தியார் பெல் அடிக்க சொன்னா பெரிய அவார்டு வாங்கபோறமாரி சந்தோஷப்பட்டு ஓடி போய் அந்த இரும்பு கம்பிய எடுத்து பெல் அடிச்ச போது............
நான் நூறு என்றதுக்குள்ள பெல் அடிச்சிரும் பாருன்னு சொல்லி,எண்ண ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல பெல் அடிச்சதும்,பாத்தியா!!!!!.சொன்னேன்ல?ன்னு சொல்லி பக்கத்துல இருக்க நண்பன்கிட்ட பெருமைப்பட்டபோது........
.
.
.
இப்படி நினைவுகள் மட்டுமே எஞ்சி இருக்கும் பள்ளி வாழ்க்கையை நினைக்கும்போதெல்லாம்,பெருகி வரும் கண்ணீரை துடைத்து கண்களுக்கு ஆறுதல் சொல்லதொடங்கி விடுகின்றன எமது கைகள்......

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (25-Apr-21, 1:06 pm)
சேர்த்தது : Mohamed iniyas
Tanglish : palli ninaivukal
பார்வை : 357

மேலே