Mohamed iniyas - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mohamed iniyas |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 11-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 15 |
நான் ஒரு கட்டிட பொறியியலாளன்....கவிதைகள்,கதைகள் எழுதுவதில் ஆர்வமிக்கவன்......
குழிவிழுந்த கண்கள்,சுருங்கிய தோல்,ஒட்டிப்போன கன்னங்கள் என்பதெல்லாம் அவளுக்கே உரித்தான அடையாளங்கள்.பத்தாததற்கு அவள் முதுகும் லேசாக வளைந்தே இருக்கும்.அவள் இடுப்பில் எப்போதும் ஒரு சுருக்குப்பை தொங்கிக்கொண்டேஇருக்கும்.அவளுக்கென்று அவளை போலவே சில தோழிகள்.பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பாள்.என்னதான் பேசுவாளோ?. ஆனால் பேசுவாள்.அவளுக்கு மட்டும் மூன்று கால்கள்.ஆம்.ஊன்றி நடக்க அவள் பயன்படுத்தும் அந்த கம்புதான்அவளின் மூன்றாவது கால்....என் அம்மாதான் அவளின் ஒரேபெண்குழந்தை.அதனால் என் மாமாவை விட, என் அம்மா மீது அவளுக்கு அளவுகடந்த பாசம்.அந்த பாசமகளின் வயிற்றில் பிறந்ததாலோ என்னவோ,என் மீதும் அதே பாசத்தை காட்
இரவு எட்டு மணி.எதிரே வருவது யார் என்பதை கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கும்மிருட்டு.வேகவேகமாக நடைபோட்டு வந்துக்கொண்டிருந்தான் சுந்தர்.அவனுக்கு அந்த இருட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பழகிபோன ஒன்றுதான்.அன்றைய நாள் அந்திப்பொழுதில் வானம் மழைபொழிந்துவிட்டு அப்பொழுதுதான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.அந்த மழையில்,பள்ளத்தில் நிரம்பி இருந்த நீரை அந்த கும்மிருட்டிலும் அவன் கண்டுக்கொள்ள தவறவில்லை.அந்த பள்ளத்தை வேகமாக ஒரு தாண்டு தாண்டினான்.அவன் காலில் போட்டிருந்த செருப்பு அறுந்துவிட்டது.அதை அவன் இரண்டு நாட்களாகவே எதிர்பார்த்து இருந்தான்.அறுந்த செருப்பை கைகளில் எடுத்துக்கொண்டுவேகமாக நடக்கத்துவங்க
அவளுக்கு வயது முப்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.பார்க்க திருத்தமான முகத்துடன் அழகாக இருப்பாள்.ஒரு தனியார் நிறுவனத்தில் அவள் வேலை செய்து வந்தாள்.பிறந்தஉடனே தன்னுடைய தாயை பறிகொடுத்தவள்.உறவு என சொல்லிக்கொள்ள அவளுக்கு தன்னுடைய அப்பாவை தவிர வேறு யாருமில்லை.கூடப்பிறந்தவர்கள் என சொல்லிக்கொள்ளவும் யாருமில்லை.அவளுடைய அப்பா ஒரு நிறுவனத்தில் வேலை செய்து தன் மகளை காப்பாற்றினார்.ஆனால் அவளிடம் அன்பு காட்ட அவருக்கு நேரமில்லை.அவளிடம் உட்கார்ந்து,அவளுடன் பேச அவருக்கு தருணங்கள் அமையவில்லை அல்லது அவர் அமைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை.பணம் சம்பாதித்து,மகளை வளர்த்தால் போதும் என்று இருந்தது அவரின் நிலைப்பாடு.அவளுக்கு
'என்னப்பா வண்டி ஓட்டுறே.கொஞ்சம் சீக்கிரமா போப்பா.எத்தனை தடவை சொல்லுறது'என்று ஆட்டோ காரரை கடிந்துகொண்டாள் தீபா."நா என்னம்மா செய்றது?ரோடு எவ்ளோ மோசமா இருக்கு.எப்புடி வேகமா போறது"என்று பதிலுக்கு தன் பக்க நியாயத்தை சொன்னார் அந்த ஆட்டோகாரர்.அவர் சொல்வதும் உண்மைதான்.அந்த சாலை குண்டும் குழியுமாகதான் இருந்தது.சர்க்காருக்கு இதையெல்லாம் கவனிக்கதான் நேரமேது?...அந்த ஆட்டோவின் ஆட்டத்திற்கு ஏற்ப,தீபாவின் கைபேசி இசைக்க தொடங்கியது.எடுத்து பேசினாள்.எதிர்புரத்தில் ஒரு பெண்ணின் குரல்கேட்டது.அவள்வேறுயாருமில்லை.தீபாவின் நெருங்கிய தோழி ரமாவின் அம்மா சுந்தரிதான்.அவளுடைய சூழ்நிலையில் யார் இருந்தாலும் பதற்றமாகத்தான்
மின்னல் ஒன்று பெண்வடிவு கொண்டு
பூமிக்கு வந்ததோ
முகில்கூட்டம் தென்றலின் கூட்டணியில்
உன் கூந்தலை வடிவமைத்ததோ
முள்ளில்லாமல் பூக்க நினைத்த ரோஜா இதழ்கள்
உன் பூவிதழில் இடம் பிடித்ததோ
மாலையின் அழகை எல்லாம் ஒன்று சேர்த்ததுதான்
உன் மௌன விழிகளோ
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது