ரோஜா இதழ்கள் உன் பூவிதழில் இடம் பிடித்ததோ

மின்னல் ஒன்று பெண்வடிவு கொண்டு
பூமிக்கு வந்ததோ
முகில்கூட்டம் தென்றலின் கூட்டணியில்
உன் கூந்தலை வடிவமைத்ததோ
முள்ளில்லாமல் பூக்க நினைத்த ரோஜா இதழ்கள்
உன் பூவிதழில் இடம் பிடித்ததோ
மாலையின் அழகை எல்லாம் ஒன்று சேர்த்ததுதான்
உன் மௌன விழிகளோ

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-21, 4:40 pm)
பார்வை : 178

மேலே