கிராம வாசனை

கண்ணயர்ந்து தூங்கும் காலை வேளையில்
கணீர் என்ற கோவில் மணியினூடே
கீச் கீச்சென்று குருவியின் கீதம்
காகா என்று பாடினார் காக்கையார்
கிளியின் கீகீ கொஞ்சும் சப்தம்
கோழி கூவியது எங்கோ தொலைவில்
கிண்கிணி சப்தம் பால்காரரின் சைக்கிளிலிருந்து
கட்டிலில் இருந்து விழுந்தேன் கீழே
கண்டது கேட்டது எல்லாமே கனவா
கடந்த காலம் தோன்றி மறைந்தது
கூக்குரல் மனதில் ஓரத்தில் ஏமாற்றமாக
கிராமத்து அனுபவம் இயற்கையோடு ஒன்றியது
கிடைக்குமா அந்த அனுபவம் இனி?

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (22-Apr-21, 7:14 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : kiraama vasanai
பார்வை : 159

மேலே