இவள் முகம்
அங்குமிங்கும் ஓடியாடும் வெள்ளை மேகங்கள்
தங்கிட நினைத்தான் மலையின் பின்பரிதி
மஞ்சளும் சிவப்பும் பூத்த மேல்வானம்
நதி ஓரம் நடந்து நானுமவளும்
என்னவள் முகம் மஞ்சள் பூசியது போல் ...
மாலையும் போனது இருள்பூத்த இரவு..
மெல்ல கீழ்வானில் வந்த மஞ்சள்நிலா
இவள் முகத்தில் நிலவொளி வீச
தங்கமென ஒளிர்ந்த இவள் முகம்....
அதைக் கண்டோ ஏனோ மஞ்சள்நிலா
வெட்கிப்போய் மேகம்பின் ஒளிந்து
கொண்டதோ சொல்லடி நீயே