அன்றும் இன்றும்

நிலவைக் காட்டி
சோறுட்டியது அன்று
அலைபேசியைக் காட்டி
சோறூட்டுகிறோம் இன்று
கைக்கடிகாரத்தில் நேரம்
பார்த்தது அன்று
கைபேசியில் நேரம்
பார்க்கிறோம் இன்று
தொலைக்காட்சியில் சீரியல்
பார்த்தது அன்று
அலைபேசியில் சீரியல்
பார்க்கிறோம் இன்று
அறிவை வளர்க்க நூலகம்
சென்றோம் அன்று
அறிவை வளர்க்க
அலைபேசியை தடவுகிறோம் இன்று
கல்விக்கூடம் சென்று
பயின்றோம் நேற்று
கைபேசியில் கல்வி
பயில்கிறோம் இன்று கடிதங்களில் நலம் விசாரித்தோம் அன்று
அலைபேசியில் நலம்
விசாரிக்கிறோம் இன்று
கருவறையில் தெய்வத்தை
வணங்கினோம் அன்று
கைபேசியில் தெய்வத்தை காட்சி
படுத்துகிறோம் இன்று
திரையரங்கில் திரைப்படம்
பார்த்தது அன்று
தொடு திரையில் திரைப்படம்
பார்ப்பது இன்று
வீட்டுக்கொரு மரம்
வளர்த்தோம்அன்று
ஆளுக்கொரு அலைபேசி
வைத்துள்ளோம் இன்று
ஊருக்கு ஒரு கோவில்
கட்டினோம் அன்று
ஊருக்கு ஒரு அலைபேசி கோபுரம்
காட்டுகிறோம் இன்று

எழுதியவர் : ஜோதிமோகன் (5-May-21, 10:16 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : anrum intrum
பார்வை : 101

மேலே