என் அம்மா

*என் அம்மா*

என் அம்மாவின் ஞாபகங்கள்
என் மனதினிலே எண்ணங்களாய்

என்ன தவம் நான் செய்தேன்
என் தாயாய் அவள் கிடைக்க

இப்பிறப்பில் எனக்கு ஒரு வாழ்வை
அளித்த அவள் எனக்கு தெய்வம் தான்

தனித் திறமை தான் கொண்டு
மற்றவரையும் ஊக்குவிப்பவள்

அவள் திறமை எனக்குள்ளே
பரவிக் கிடக்கிறதோ

கடலளவு தமிழ் சொற்கள், அதைக்
கொண்டு புகழாரம் பாடுகிறேன்

தமிழும் பெருமை கொள்ளும்
என் தாயை நான் பாடுவதால்

எழுதுவது என் பழக்கம், பிள்ளையார்
சுழியோடு நானும் ஆரம்பிப்பேன்

அம்மாவை நினைத்துக் கொண்டால்
அருவி போல் வார்த்தை அவரும்

அவளும் பக்கத்திலே அமைதியாய்
அமர்ந்திடுவாள்

நான் எழுதும் அழகையே கண்
கொள்ளாமல் பார்த்திடுவாள்

அதனால் கண் திருஷ்டி எனக்கில்லை
என் எழுத்துக்கும் இருந்ததில்லை

என் அம்மாவைப் பற்றி
பல கவிகள் எழுதிவிட்டேன்

மற்றுமோர் கவிதையாய்
இதுவும் உலா வரட்டும்

என்னைப் படைத்தவளுக்கு
இக்கவியை சமர்ப்பணம் ஆக்குகிறேன்

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 03.06.19 நேரம் - காலை 11.06 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (9-May-21, 7:16 am)
Tanglish : en amma
பார்வை : 500

மேலே