அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

அம்மா
******

நெஞ்சகத்தின் கீழ் கூடுகட்டியவள்!
தொப்பிலிலே கையிறு கட்டியவள்!
உதிரத்தில் உணவு ஊட்டியவள்!
எனை காத்த இரும்பு பெட்டியவள்!

பத்து மாதம் எனை சுமந்தவள்!
வலியோடு பகலிரவு பல கடந்தவள்!
இதய துடிப்பை இன்னிசையாக்கியவள்!
இருள் பயத்தை போக்கியவள்!

உளி கொண்டு வலி ஊசியாய் குத்தியும்!
எனை பெற்றெடுத்(த).....தாயே!
மூன்றெழுத்து அம்மா!
நீ எனக்கு முடிவில்லா வானம்!

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்னையர் தினம் வாழ்த்துக்கள் !
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🔥ர.ஸ்ரீராம் ரவிக்குமார்☔

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (9-May-21, 4:22 am)
பார்வை : 505

மேலே