சிரித்தால் ஒருசிரிப்பு சித்திரம் தோற்கும்

சிரித்தால் ஒருசிரிப்பு சித்திரம் தோற்கும்
சிவந்தால் அவள்கன்னத் தில்மாங் கனிதோன்றும்
பார்த்தால் ஒருபார்வை கண்கள்கா தல்சொல்லும்
பார்பாரா மல்போவ தோ ?
----ப வி இ வெ

சிவப்பித ழாள்சிரிப்பில் சித்திரம் தோற்கும்
சிவந்தால் அவள்கன்னத் தில்மாங் கனிதோன்றும்
சிவந்த வரியோடும் கண்கள்கா தல்சொல்லும்
சிவந்திபா ராதுபோனால் என்மனம் நோகும் !

----கலிவிருத்தம்

சிவப்பித ழாள்சிரிப்பில் சித்திரம் தோற்கும்
சிவந்தவள் கன்னத்தில் மாங்கனி தோன்றும்
சிவந்த வரிவிழிகள் காதலைச் சொல்லும்
சிவந்திபாரா மல்மனம்நோ கும்

---ஒ வி இன்னிசை வெண்பா

சிவப்பித ழாள்சிரிப்பில் சித்திரம் தோற்கும்
சிவந்தவள் கன்னம் கனிமா - சிவந்தாள்
சிவந்த வரிவிழிகள் காதலைச் சொல்லும்
சிவப்பிபாரா மல்மனம்நோ கும்

---ஒ வி நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-21, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே