பலாப்பழமடி நீயும்
நேரிசை வெண்பா
காதலி நேசிக்கும் ஆழமாட வர்மீதாம்
காதலனின் அன்பும் சரியாக -- வேதனை
காதலால் இல்லையாம் காழிலா மாபலாவே
சோதனையி லாவிழுங் கும்
காதலி காதலனை எவ்வளவு ஆழமாக காதலிக்கிறாளோ
அதேயளவு காதலன் காதலியை காதலிக்க துன்பமென்பதேது
இந்தக் காத லென்பது கொட்டையிலா மா பலா வாகும். சோதிக்காது
உடனே எடுத்து விழுங்கலாம். (காழ் = கொட்டை)
குறள் 1/12