குடும்ப புகைப்படம்

புன்னகையோடு சிறுவயது குடும்ப புகைப்படங்கள் நிழல்களாய்
பூசல்களோடு குடும்பங்கள் நிஜத்தில்
எங்கே சென்றது பந்த பாசம்
சுயநலமும் ஈகோவும் தலைதூக்கி குடும்பங்கள் சிதைந்து போயிடுச்சு
கூட்டு குடும்பம் தனிக் குடும்பமாகி போச்சு
சொத்தும் சுகமும் முக்கியமாச்சு
சொந்த பந்தம் விட்டு போச்சு
சிரிக்கிறோம் குடும்பமாய் புகை படத்தில்
சிதைத்து விட்டோம் குடும்பத்தை நிஜத்தினிலே..

எழுதியவர் : ஜோதிமோகன் (16-May-21, 12:08 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kudumba pukaipadam
பார்வை : 52

மேலே