என்னிடம் நீ சொல்லாமலே பிரிந்துவிட்டாய் 555

***என்னிடம் நீ சொல்லாமலே பிரிந்துவிட்டாய் 555 ***
ப்ரியமானவளே...
உனக்குள்ளும் காதல் வந்தபோது
நீ எனக்கே சொந்தமாய்...
உனக்கு
பசி வந்தால்...
உன் கன்னத்தில்
முத்தமொன்று கேட்பாய்...
உறங்கும் நேரத்தில் தலையணை
நானே என்று அனைத்து கொள்வாய்...
உனக்கு சோகம் என்றால்
என்தோளில் ஆறுதல் தேடுவாய்...
வெட்கத்தையும் அச்சத்தையும்
என்னிடமே உணர்ந்தேன் என்றாய்...
நீ உடுத்தும் ஆடையை கூட
என்னிடமே விருப்பம் கேட்பாய்...
என் மகிழ்ச்சியிலும் சோகத்திலும்
நீ எனக்கு மடித்தந்தாய்...
நமக்குள் ஏற்பட்ட
பிரிவுக்கு
பிரிவுக்கு
காரணம் தெரியவில்லை...
என்னிடம் நீ
சொல்லாமலே பிரிந்துவிட்டாய்...
என் இதயம் உடைந்தது
என் வாழ்வும் இருண்டு போனது...
ஒவ்வொரு நாளும்
முடியாத பொழுதாகவும்...
விடியாத
இரவாகவும் நீள்கிறது...
நமக்குள்
ஏற்பட்ட இந்த பிரிவில்...
நாளை விடியும் பொழுதில்
உன் முகம் பார்க்க வேண்டும்.....