நெஞ்சில் இருக்கும் உன் நினைவுகள் 555
***நெஞ்சில் இருக்கும் உன் நினைவுகள் 555 ***
நினைவானவளே...
உன் நினைவாக
என்னிடம் இருப்பதெல்லாம்...
உன் அழகிய
நினைவுகள் மட்டும்தான்...
என் நினைவாக உன்னிடமே
ஏதும் இல்லை என்கிறாய்...
நிமிடம் கூட நான்
சுமையாக நினைத்ததில்லை...
நெஞ்சில் இருக்கும்
உன் நினைவுகளை...
வலிகளை கொடுத்த உன்னிடமே
மருந்தும் கேட்கிறேன்...
யாருக்கும் தெரியாமல் இரவில்
கண்களை மூடி அழுதாலும்...
பகலில் முடியவில்லை தொலைவில்
உன்னை நான் காணும்போது...
உன்னை
உருகி காதலித்தேன்...
என் உள்ளம்
உனக்கு புரியவில்லை...
நான் எரிமலையை
காதலித்திருந்தால் கூட...
என் காதலில் உருகி இருக்கும்
எரிமலையும் பனிமலையாக...
நீ மட்டும் ஏனடி
என்னை மறந்து சென்றாய்...
என்னை
வருந்த செய்கிறாய்.....
***முதல் பூ பெ.மணி.....***