தமிழச்சி

பஃறொடைவெண்பா

திருவிளையா டல்கூந்தல் வாசம் -- திருந்தா

சவுரிநெய் பூசபூமிக் கண்டது -- அன்றுமே
ஆணியில் தொங்கிட மாட்டிவைப்பார் -- காணவே
கட்டைமுடி செம்பட்டை யாம்நிறம் -- ஆடா
வதுவும் அலைப்பாயத் தள்ளுவர் -- பார்க்கவே
ஆணுயரம் தானிருக்க கால்செருப்பு -- காண்காலில்
பார்லர் தவறா வழகுசெய்வள் --- பாக்கெட்
மணிவேண்டி நச்சரிப்பள் பெற்றோர் -- அநியாயம்
மூன்றுமுழப் பூப்பின்னாக் கூந்தலிலே? --- பொட்டொன்றும்
வைக்காள் தமிழச்சி. நன்கு


..........

எழுதியவர் : பழனி ராஜன் (24-May-21, 6:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 120

மேலே