உயர் - நேரிசை வெண்பா

முன்னேறு மெண்ணம் முளைத்திடுங் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்பாடா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்து உயர்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-May-21, 4:35 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 49

மேலே