கைகண்டார் உள்ளத்துக் கண் - நேரிசை வெண்பா
கைகண்டார் உள்ளத்துக் கண்
நேரிசை வெண்பா
கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெ(ய்)நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண். 1
- இருபா விருபது, திருநெறி 3