ஊட்டச்சத்து பாடல்

பல்லவி -1
1) ஊட்டச்சத்து குறைபாடுதான் எல்லா நோய்க்கும் காரணம்
2)உயிர்ச்சத்து இல்லேனா கழிவு தேங்கி போயிடும்
சரணம் -1
3)விட்டமினு உயிர்ச்சத்து ரெண்டு பேருமே ஒன்னு தான்
4)அஞ்சு வகை சத்து அது பேரு ஊட்டச்சத்து தான்
5)கொழுப்பும்,புரதமும் உறுப்பு தசைய வளர்த்து விடும்.
6)மாவும், புரதமும் இயங்கும் சக்தியை கொடுத்து விடும்.
7)விட்டமினு, மினரலு மத்ததெல்லாம் பாத்துகிடும்.
8)விட்டமினு, மினரலு மத்ததெல்லாம் பாத்துகிடும்.
9)விட்டமினு,மினரல் சத்து, கொழுப்பு, மாவு புரத சத்து
10)அஞ்சு சத்தும் சேர்ந்தா தான் அதுக்கு பேரு ஊட்டச்சத்து
11)காய்கறி பழம் எல்லாம் வைட்டமின் மினரல் கொடுத்துடும்
12)அரிசி உணவில் எப்பவும் மாவு சத்து கிடைச்சிடும்
13)தானிய உணவில் இருந்து புரத சத்து கிடைச்சிடும்.
14)மிகையினும் குறையினும் எப்பவுமே நோய் செய்யும்.
15) சரிசம ஊட்ட உணவு ஆற்றலையே கொடுத்துடும்
16)மேலே மேலே உண்ணும் போது உறுப்பு ஒய்ஞ்சி போயிடும்.
17)அஜீரணம் இல்லாம உடம்ப நம்ம பாக்கணும்
18)பசியே எடுக்காம எதுக்கு நம்ம உண்ணனும்
பல்லவி -2
19)ஊட்டச்சத்து குறைபாடுதான் எல்லா நோய்க்கும் காரணம்
20)உயிர்ச்சத்து இல்லேனா கழிவு தேங்கி போயிடும்
சரணம் -2
21)மீறி போகுதேனு உணவு உண்ண கூடாது
22)வாந்தி, பேதியையும் அடக்கி வைக்க கூடாது
23)கழிவு தேங்கி நின்னா கிரிமி அத சாப்பிடும்
24) கழிவு நீங்கி போனா எதிர்ப்பு சக்தி ததும்பிடும்
25)அஜீரணம் இல்லாம உடம்ப நல்லா பாக்கணும்
26)நோய நாடாம ஆரோக்கியத்தை தேடணும்
27)வாழ்வியல புரிஞ்சி நாம வாழ இனி பழகலாம்
28)இயற்கையை வணங்கி நாம எப்பவுமே வாழலாம்
பல்லவி -3
29)ஊட்டச்சத்து குறைபாடுதான் எல்லா நோய்க்கும் காரணம்
30)உயிர்ச்சத்து இல்லேனா கழிவு தேங்கி போயிடும்
கவிஞர் வி.ர.சதிஷ்குமரன்

எழுதியவர் : வி.ர.சதிஷ்குமரன் (28-May-21, 12:27 am)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 418

மேலே