ஊட்டச்சத்து எவை
ஊட்டச்சத்தை பற்றி அறியாதது தவறு, ஊட்டச்சத்து என்றால் ஐந்துவகை சத்துக்கள் அடங்கியதாகும் அவை மாவுசத்து(carbohydrate), புரதசத்து(protein), கொழுப்பு சத்து(Fat), வைட்டமின் சத்து (அ)உயிர்சத்து , மற்றும் தாது சத்து (மினரல்) மாவுசத்து உடல் இயங்க ஓட, ஆட, விளையாட, போன்றவைகள் செய்ய எனர்ஜி தருகிறது இவை அரிசி அவை சார்ந்த உணவுகளிலிருந்து கிடைக்கிறது , புரத சத்து தசை வளர்ச்சி, செல்கள் வளர்ச்சி உள்ளிட்ட உடல் வளர்சிதை மாற்ற பணிகளை செய்கிறது இவை பெரும்பாலும் பருப்புவகை உணவு மற்றும் முட்டையில் புரதம் அதிகம் கிடைக்கிறது, கொழுப்பு அதிலிருந்து வரும் எண்ணைகளை உட்கொல்லுதல் உடல் மூட்டு, மூளை, போன்ற அசைவுகளுக்கு உதவுகிறது இவை மாமிசம் அவைசார்ந்த எண்ணை உணவுகளிலிருந்து கிடைக்கிறது, வைட்டமின் எனும் உயிர்சத்து பெரும்பாலும் காய்கறி பழம் சார்ந்த உணவிலிருந்து கிடைக்கிறது, அதே போல் மினரல் சத்து என்பது ஐயோடின், துத்த நாகம், இரும்பு சத்து போன்றவை பூமிக்கு அடியிலிருந்து வரும் பழம், காய்கறிகள் மற்றும் கடல் சார் மீன் உணவுகளில் அதிகமிருக்கிறது. அனைத்து மருத்துவ முறைகளிலும் ஊட்டச்சத்து குறைபாடே அனைத்து வித நோய்களுக்கும் அடிப்படை காரணம். எனவே நாம் உண்ணும் ஒரு நாள் உணவில் இவை ஐந்து சத்தும் சரிவிகித அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இவற்றுள் ஏதாவது ஒன்றை அதிகம் உண்டாலும் சரி குறைவாக உண்டாலும் அவை நோய்க்கு காரணமாக அமையும். அரிசி உணவை காலை இட்லி தோசை மதியம் அரிசி சாப்பாடு இரவும் அதே அரிசி சார் உணவு போன்றவை தொடந்து எடுத்து கொள்வதே சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் காரணம். அனைத்து வித உணவுகளிலும் இவை ஐந்து சத்தும் கலந்து கலந்து சில குறிப்பிட்ட சதவிகிதங்களில் சத்துக்கள் இருக்கும் குறிப்பாக முட்டை உணவில் புரதம் அதிகமாகவும் மற்ற சத்துக்கள் சற்று குறைந்த விகிதத்திலும் கலந்து இருக்கும். கொரோனா வைரஸ் நுரையீரலுக்கு அதிக சத்து கிடைக்க வைட்டமின்கள் மிக அவசியம், பின்னர் லிவர் நன்றாக இயங்கி WBC செல்கள் மற்றும் வைரஸ் மெமரி செல்கள் உருவாக மற்றும் கொரோனா வைரசை கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க புரதம் மிக மிக அவசியம். எனவே அவசர தேவைக்கு மல்டி வைட்டமின் அதோடு மினரல் சத்துக்களுள் ஒன்றான ஜிங்க் சத்து சேர்த்த மல்டி வைட்டமின் மத்திரைகளை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். தீவிர பெறுந்தொற்றை வீழ்த்துவதில் வைட்டமின், ஜிங்க், மற்றும் புரதத்தின் பங்கு தான் மிக மிக அதிகம். எனவே மேலுக்கு மேல் உண்டு கொண்டே இல்லாமல் பசித்து உண்ணுதல் அல்லது சீரான இடைவெளியில் உண்ணுதல் பழக்கம் நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும். கொரோனா பேரிடர் காலத்தில் காலை இரவு திட உணவுகளை தவிர்த்து கஞ்சி,ஜூஸ், சூப் போன்ற நீரை அதிகம் கொண்ட உணவை எடுத்தல் நலமானது. உண்ணும் திட உணவை வயிறு ஜீரணிக்க அவரவர் உழைப்பை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்றென்று சில மணி நேரம் ஆகும் அவை ஜீரணமாகி சத்துக்களை சிறுகுடல் உறிஞ்சி எஞ்சிய கழிவுகள் மலகுடலில் செல்லுதல் போன்ற பணிகளுக்கு முன்னரே டீ, காபி, சிற்றுண்டி உண்பது உடலுக்கு கேடையே உண்டாக்கும். மேலும் உண்ட உணவு ரத்தமாக மாறுவதை விட ஜீரணத்திற்கு செலவாகும் ரத்தம் அதிகம் செலவாகும். திட உணவு, கறி வகை உணவுகளை உழைப்பே இல்லாமல் கொரோனா காலத்தில், லாக் டவுனில் உட்கொள்வது நோய்க்கு மருந்தாகாமல் கிரிமிகளுக்கு, வைரசுக்கு உணவாக மாறும் சிந்தித்து அறிவை பயன்படுத்தி விழிப்புணர்வு கொடுப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் ஊட்டச்சத்து சார்ந்த மேலும் விரிவான தகவல்களுக்கு அரசு ஊட்டச்சத்து புத்தக பக்கங்களை எனது 346 பக்கங்கள் அடங்கிய "கொரோனாவை எதிர்கொ(ல்ல)ள்ள" நூலை படித்து தெரிந்து கொள்ளவும். மேலும் பல்வேறு கொரோனா தடுப்பு மற்றும் நோயில்லா வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள நூலினை விரிவாக படித்து தெரிந்து கொள்ளவும் இப்படிக்கு எழுத்தாளர் வி.ர.சதீஷ்குமரன்