ஹாம்பர்கர் ஹேம்லட் ஓர் IAS நேர்காணல்

ஓர் IAS நேர் காணல் பேனலிஸ்ட்டில் ஒருவர் மாணவனிடம்

HAMLET என்றால் ?
டு யூ மென் ஆம்லெட் !
நோ நோ... ஹாம்லெட்

OR யூ மீன் HAMBURGER ?
ஓ நோ நோ இரண்டும் இல்லை இட் ஐஸ் HAMLET
எஸ் எஸ் இப்பொழுது புரிந்து விட்டது

HAMBURGER OMELET இரண்டையும் இணைத்து உருவாக்கிய
புதிய டிஷ் .HAMLET ..அம் ஐ கரெக்ட் சார் ?

O MY GOD !!!...சுத்த சாப்பாட்டுப் பேர்வழியாய் இருப்பீர்கள்
போலிருக்கிறதே ஒரு க்ளூ --- TO BE OR NOT TO BE THAT IS THE QUESTION !

இருப்போமா அல்லது இல்லாமல் போவோமா --இது கொரோனா காலத்திற்கு ஏற்ற கேள்விதான்

உங்களை மொழிபெயர்க்கச் சொல்லவில்லை ...க்ளூ வை வைத்து
HAMLET என்ன என்று சொல்ல வேண்டும்

மை குட் னஸ் மீண்டும் அந்த இங்கிலீஷ் ஆம்லெட் கேள்வி
இறைவா தமிழ் நாட்டில் தமிழ்க் கேள்வி கேட்க ஆளில்லையா ?

சரி சரி ...தமிழிலே கேட்கிறேன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் ....எழுதிய புலவர் பெயர் ??
நீங்கள் தான் ----நான் ....இதோ அரைத்தூக்கத்தில் இருக்கிறாரே பேனலிஸ்ட் ---அவர்
என்ன உளறுகிறீர் IAS ஆகத்துடிக்கும் மாணவரே ?
க்ளூ --FLOWER , HILL

நானா உளறுகிறேன் ??
எதுவும் எனது ஊர் யாரும் எனது உறவு நட்பு என்பது யுனிவர்சல்
செய்தி --இது எல்லோருக்கும் உரியதன்றோ ஒரு புலவனுக்கு என்று
சொல்லலாமா ?
இப்படி நல்லுணர்வில் மனிதன் உலகில் வாழத் துவங்கினால்
நீங்கள் இங்கிலீஷில் கேட்டீர்களே TO BE OR NOT BE என்ற QUESTION
மனிதனுக்கு வரவே செய்யாதே !!!

BRAVO ஆஹா அழகான விளக்கம்
ஆம் ஷேக்ஸ்பியரின் ஹம்லிட்டியன் டைலாமா யாருக்கும் வராது
உண்மை ஷேக்ஸ்பியரையும் புலவர் பூங்குன்றனையும் இணைத்து
சரியாக விளக்கிவிட்டீர்

விளக்கத்தை தந்து பதிலை உங்கள் வாயிலிருந்தே
வரவழைத்து விட்டேன் பார்த்தீர்களா ....இது தான் IAS மூளை !

நேர்காணலைத் தொடருவோம்
இன்னுமா ?
எஸ் மை ப்ரைனி பாய்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jun-21, 5:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே