யதார்த்த நிலை இதுவன்றோ

மனிதநேயம்
மறைந்தபின்
மனிதாபிமானம்
வாழ்கிறது என்பதும்...

விளைநிலமும் வயல்வெளியும்
விண்ணைத்தொடும்
வீடானபின்
விவசாயத்தை
வளர்ப்பது என்பதும் ...

புதை குழியில்
இறங்கி விட்டு
புண்ணிய பூமியில்
வாழ்கிறோம் என்று
புலம்புவதும் ....

விழிகளை திறக்காமல்
இருட்டில் விளக்கை
தேடுவது என்பதும் ....

மதம்பிடித்த யானை போல்
மத வெறி பிடித்தவர்கள்
மத பிரச்சாரம் செய்வது
என்பதும் ....

சாதிக் கூட்டங்களில் கர்ஜித்து
சாதியைப் பெயருடன் இணைத்து
சாதி வெறி இல்லை
எனபதும் ....

மொழிப்பற்று அற்றவர்கள்
வேற்று மொழிக்கு
துணை நின்று
மொழியைக் காப்பேன்
என்பதும் ....

வேடிக்கை வினோதங்கள்
நிகழ்வது வாடிக்கை
என்பதால் கண்டும்
காணமால் செல்கிறோம் ...

இன்றைய யதார்த்த நிலை
இதுவன்றோ !

தமிழனே விழித்திடு
தமிழைக் காத்திடு !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Jun-21, 8:10 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 195

மேலே