வலம்வரும் வறுமை

காடு திருத்திக் கழனி யாக்கிக்
கடுமையா யுழைத்தே பயிரது வளர்த்தும்
தேடி வருவ திலையே செல்வம்,
தெரிந்தது உழவனை வலம்வரும் வறுமையே..

மாடி வீடு கட்டிட உழைத்தவன்
மண்குடில் தன்னில் ஒதுங்கி நிற்கிறான்..

பட்டுத் துணியை நெய்தவன் பிள்ளை
ஒட்டுத் துணியை உடுத்திச் செல்கிறான்..

படைத்தவன் படைப்பில் பாகு பாடா,
பாமரன் தன்னை வாட்டிடும் வறுமையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Jun-21, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : valamvarum varumai
பார்வை : 66

மேலே