வாழ்க்கை
ஏதோ வந்தோம் இருந்தோம் போனோம்
என்று வாழாது வந்தோம் அவனரு ளால்
இருந்தோம் அவன் கிருபையால் நல்லது
எண்ணி நன்மையே செய்து வாழ்ந்து
போனோம் அவன் என்னும் போது
'அவன்' இட்ட பணி நிறைவேற்றி
என்றே அமைத்துக்கொள்ள வாழ்வும்
இனிக்கும் உலகம் போற்ற