கண்கள் இருண்டால்
கண்கள் இரண்டால் பக்கம் 11
நீ தான் போன் பண்ணுகிற ஆளா?அப்புறம் எப்படி இருக்க..
ரூம் எல்லாம் செட் ஆயிருச்சா? என்று பவித்திரா தொலைபேசியில் கேட்க ..
" ஆமா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நல்லா இருக்கு.நீ உங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டியா?
அங்க எப்படி இருக்கு?" என்று கேட்டான் ரித்திக்.
"எல்லாம் நல்லா இருக்கு அப்புறம் நான் கொஞ்ச நாளைக்கு இங்கே தான் இருக்கப் போகிறேன். நீ சென்னையில தான் இருப்ப? இடையில் வந்தால் நேரில் பார்ப்போம்" என்று பவித்ரா சொல்ல
" நிச்சயமாக.. டாக்டர் சரவணன் நாளைக்கு என்னை அபில்லோ மருத்துவமனைக்கு வர சொல்லி இருக்கிறார். நான் நாளைக்கு அவரை சந்திக்க போகிறேன்"
" உனக்கும் அவருக்கும் வேற வேலையே கிடையாது என்னமோ பண்ணுங்க அவர மாதிரியே வேலை வேலை என்று கடைசியில் என்னை மறந்து விடாதே" என்று பவித்ரா சொல்ல..
உன்னை எப்படி மறப்பேன் என்று ரித்திக் சிரித்துக்கொண்டே சொல்ல அங்கே பரிமாறிக்கொள்ளாத காதல் வார்த்தைகளில் விளையாடிக்கொண்டிருந்தது..
நீ என்ன செய்வதாக பிளான் என்று ரித்திக் பவித்திராவிடம் கேட்க " இங்கே கோயம்புத்தூரிலே எங்கள் உறவினர்கள் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள். எனக்கு ஒரு தனி அறை ஒதுக்கி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். நாம தான் இப்போது டாக்டர் ஆகி விட்டோமே!!" என சிரித்துக் கொண்டே பவித்ரா சொல்ல
" ஓகே டாக்டர்.. நோயாளிகள் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் " என்றான் நக்கலாக ரித்திக்.
"உன்னுடைய முதல் நோயாளியை நீ பார்த்ததை விட நான் கவனமாக பார்த்துக் கொள்வேன்" என்றாள் பவித்ரா.
ஆம்.. ரித்திக்கின் முதல் நோயாளி பவித்ரா தான். அன்று கல்லூரி காலங்களில் செய்முறை வகுப்பில் திடீரென எதிர்பாரா விதமாக தன் கையை லேசாக கத்தியால் அறுத்துக் கொள்ள உடனடியாக வந்து கட்டுப் போட்டுவிட்டான் ரித்திக்..
அந்தக் கட்டு கைக்களை மட்டுமல்ல கண்களையும் இணைத்துக் கொண்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உரையாடலுக்குப் பின் போனை துண்டித்து விட்டு உறங்க சென்றான் ரித்திக்.
நேரம் இரவு ஒரு மணி - டாக்டர் சரவணன் தனது வீட்டில் உள்ள ரகசிய அறைகளில் அந்த பெட்டியை திறந்தார்.நல்லவேளை எதுவும் ஆகிவிடவில்லை என்று நினைத்துக்கொண்டு பெட்டியில் இருந்ததை எடுத்து பத்திரமாக தனது ஆய்வகத்தில் வைத்தார்.
தனது லேப்டாப்பை எடுத்து லண்டன் மருத்துவர் ரேச்சர்ட் உடன் வீடியோகால் பேச ஆரம்பித்தார்.
'" டாக்டர் ரேச்சர்ட் இன்னைக்கு ஒரு சாம்பிள் புதுசா கிடைச்சிருக்கு அதுல நான் நம்ம எக்ஸ்பிரிமெண்ட் க்கு புதுசா வாங்கின மிஷின் யூஸ் பண்ணி இருக்கேன். இன்னும் ஓரிரு வாரங்களில் அதோட ரிசல்ட் நான் சொல்லுறேன். நீங்க மத்த டாக்டர் கிட்ட இருந்து எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி எனக்கு அனுப்புங்க" என்று டாக்டர் சரவணன் சொல்ல
" எஸ் கண்டிப்பா டாக்டர். நாம எப்படியும் இதை சாதித்தே ஆகனும் டாக்டர். உலக அளவில் மனித குலத்திற்கே நாம் செய்கின்ற இந்த ரிசர்ச் எதிர் காலத்தில் யூஸ்ஃபுல்லா இருக்கும் டாக்டர்" என்று ரேச்சர்ட் சொல்ல
" அதுக்குத்தான் இரவு பகல் பாராது இரவும் பகலும் பாராமல் 24 மணி நேரமும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட நாம பக்கத்தில் வந்து விட்டோம் நிச்சயம் நம் இலக்கை வெற்றியாக அடைவோம்.
அதுவரை இது சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருப்பது தான் நமக்கு நல்லது " என்று டாக்டர் சரவணன் சில அறிவுரைகளை லண்டன் மருத்துவர் ரேச்சர்ட்க்கு வழங்கி விட்டு அன்றைய தினம் உரையாடல் முடித்தார். மணி கிட்டத்தட்ட இரவு மூன்று இருக்கும். டாக்டர் சரவணன் உறங்கச் சென்றார்.
அவரது வீட்டிற்கு வெளியே நான்கு நபர்கள் சிறிய அளவில் குழிதோண்டி தோண்டிக்கொண்டு இருந்தனர்.
கண்கள் திறக்கும் பக்கம் 11 ஆக
கதை பொ.சசி குமார்