கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால் பக்கம் : 10
ஆயிரம் வியாதிகளுடன் ஆயிரம் பிரச்சினைகளுடனும் பலவித பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன அந்த அரசு மருத்துவமனை. டாக்டர் சரவணனின் கார் வேகமாக மார்ச்சுவரி நோக்கி வந்தது.
அவரின் கார் வருகைக்காகவே பிரேத பரிசோதனை அறையில் முகப்பில் இரண்டு நபர்கள் காத்திருந்தார்கள்.
"வாங்க டாக்டர் இப்பதான் பாடி வந்துச்சு அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன்" என்றார் ஒருவர்.
சரி.. இறந்த பையனின் குடும்பத்திடம் பேசி விட்டீர்களா என்று டாக்டர் சரவணன் கேட்க , " இல்ல டாக்டர் ஆனால் எப்படியாவது சமாளித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை" என்று பியூன் ஒருவர் சொல்ல உள்ளே சென்றார் டாக்டர் சரவணன்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன் நமக்கு நேரம் அதிகமில்லை உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று டாக்டர் சரவணன் உடைமாற்ற சென்றார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் முடித்துவிட்டு "ஆமா இந்த பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ண போகின்ற டாக்டர் யார்? "என்று கேட்டார் சரவணன்.
அதற்கு பியூன்கள் தங்களுக்குத் தெரியாது என்று கூறினர். சரி ஓகே யார் வந்தாலும் நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்து தான் வருவாங்க இந்த கார்டை குடுங்க என்கிட்ட பேச சொல்லுங்க என்று சொல்லிவிட்டு பியூன்கள் இருவருக்கும் சில ஆயிரங்கள் கொடுத்து விட்டு அந்தப் பெட்டியில் பத்திரமாக எடுத்துச் சென்றார் டாக்டர் சரவணன்.
ஒருவழியாக நண்பனுடன் கல்லூரிக்கு மிக அருகில் உள்ள ஒரு இடத்தில் தங்குவதற்கு ரித்திக்கு வாய்ப்பு கிடைத்தது. புது வீட்டை பார்த்துக் கொண்டிருந்தான் அவன் பொருட்களை வைப்பதற்கு ஏதுவான அறைகளையும் அலமாரிகளையும் சரி செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வட்டம் பெரிதாக இல்லை என்றாலும் ஒரு சிலர் மட்டுமே மிக நெருக்கமாக உண்டு அந்த வகையில் கார்த்திக் இவனுக்கு ஒரு சிறந்த நண்பன். ரித்திக் பெரும்பாலும் சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. இவன் சொந்த விஷயங்களில் அவன் தலையிடுவதும் இல்லை இதனால் இவர்கள் நட்பு நீடித்துக் கொண்டே இருந்தது எந்தவித சண்டையும் இன்றி.
வாழ்க்கையில் பொதுவாக எந்தவித காரணமும் இன்றி ஒரு சிலரை ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்கும், அவர்களது நட்பு வட்டத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றும் அது போல தான் இவர்கள் இருவரும் அதிக தகவல் பரிமாற்றம் இல்லை என்றாலும் ஒரு நல்ல புரிதலுடன் இருக்கும் நண்பர்கள்.
இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் எங்காவது ரித்திக் கிளம்பிக் கொண்டிருந்தால் எங்கே செல்கிறாய் என்று கூட கார்த்திக் கேட்பதில்லை ஆனால் அவன் எங்காவது வெளியே சென்றுவிட்டு அறைக்கு வருவதற்கு வெகுநேரம் ஆனால் தவறாமல் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பான் கார்த்திக் .
அவன் வந்த பிறகு அவன் மனநிலையை அறிந்து கொண்டு அதைப் பற்றிக் கேட்பான் இல்லையென்றால் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவான்.
நாளை டாக்டர் சரவணன் பார்க்க செல்வது பற்றி கூட ரித்திக் இன்னும் கார்த்திக்கிடம் சொல்லவில்லை.
மதியம் தொடங்கிய பணி மாலை வரை சரியாக இருந்தது எல்லாவற்றையும் அந்தந்த இடங்களில் வைப்பதற்கும் புத்தகங்களை சரியாக அடுக்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது .
இரவு இருளை அழைத்துக்கொண்டு இருந்தது.ரித்திக் ஆழ்ந்த யோசனையில் படுக்கையில் இருந்தான் எதற்காக நாளை டாக்டர் சரவணன் வர சொல்லி இருக்கிறார் அவர் என்னை பார்க்க விரும்பியிருந்தால் எப்போதும் கல்லூரிக்கு தானே வரச் சொல்லுவார் போது அபில்லோ மருத்துவமனைக்கு ஏன் வர சொல்லியிருக்கிறார் ஒருவேளை வேலை சம்பந்தமாக ஏதாவது உதவி நமக்கு செய்வாரா? இல்லை சாதாரணமாக தான் வர சொல்லி இருப்பாரா? பாவம் அவரும் எத்தனை காலம் தான் நமக்கு உதவி செய்துகொண்டே இருப்பார் என இரு மனதாய் குழம்பிக் கொண்டிருந்தான் ரித்திக்.
எப்படியோ எந்த வேலை கிடைத்தாலும் மாத வருமானத்தில் பாதி தொகையை ஆசிரமத்திற்கு கொடுத்துவிட வேண்டும் அப்போதுதான் தன்னைப்போலவே கடினப்பட்டு கொண்டிருக்கும் ஆதரவற்றவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரமுடியும் நிச்சயமாக ஆசிரமத்தில் அந்த தொகையை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் ஆகவே தன் வாழ்நாள் முழுவதும் தான் பெரும் சம்பளத்தை பாதி தொகையை ஆசிரமத்துக்குள் கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் ரித்திக்.
ரித்திக்கின் தொலைபேசி ஒலித்தது எடுத்தான் " சார் ..என்ன சார் என்ன பண்ணுறீங்க? பேசுவதற்கு நேரம் இருக்கா? " என்ற நக்கல் கலந்த குரலில் மறுமுனையில் பவித்ரா..
கண்கள் திறக்கும் பக்கம் 11 ஆக
பொ.சசிகுமார்

எழுதியவர் : சசி குமார் (6-Jun-21, 1:29 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 141

மேலே