கண்கள் இருண்டால்
கண்கள் இருண்டால் பக்கம் 9
எல்லோருக்கும் தான் ஆசைப்பட்டதை கனவுகளையும் அடையும் நாள் என்று ஒன்று வரும் அது ஒரு சிலருக்கு விரைவில் வந்துவிடும் ஒரு சிலருக்கு சில காலங்கள் பிடிக்கும் அந்த வகையில்தான் ரித்திக் இது ஒரு மறக்க முடியாத நாள் .
ஆம் அவன் நினைத்து இருந்த லட்சியத்தை அடைந்து விட்டான் இன்று முதல் அவன் மருத்துவர். அவன் மேடைகளில் மேடை ஏறும் படிகள் முழுவதும் அவனது நினைவுகளில் சற்று பின்னோக்கி கொண்டு செல்கின்றன .ஒவ்வொரு படியிலும் ஏறுவதற்கு அவன் எத்தனை தடைக்கற்களை சந்தித்து இருக்கிறான் என்பதை நினைத்துக் கொண்டு வருகிறான் இந்த நாளுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை அவன் வாழ்வில் ஏற்படுத்த போகிறது என்பதையும் அவன் உணர்ந்து கொண்டே முன்னோக்கி செல்கிறான்.
மேடையில் டாக்டர் சரவணன் மற்றும் உயர் பதவிகளில் உள்ள மருத்துவர்களும் சிறப்பு விருந்தினர்களும் அமர்ந்திருக்கிறார்கள் டாக்டர் சரவணன் சிறு புன்னகையோடு மருத்துவ பட்டம் சான்றிதழை எடுத்து சிறப்பு விருந்தினர்ககளிடம் கொடுக்கிறார். அந்த சான்றிதழை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட இறங்கும் போது அவனை அறியாமலும் அவன் கண்கள் கலங்குகின்றன. அவன் பவித்ராவை நோக்கி வந்து கொண்டிருக்கும் போதே "இவனுக்கு என்னப்பா எப்படிநாளும் டாக்டர் சரவணன் ஏதாவது பெரிய மருத்துவமனையில் வேலை கொடுத்து விடுவார் என்று சிலர் இவன் காதுபடவே பேசுவதையும் கேட்டுக் கொண்டே நகர்ந்து செல்கிறான்.
ஒரு வழியாக பட்டமளிப்பு விழா முடிகிறது அடுத்து கல்லூரி விடுதியை காலி செய்ய வேண்டும். எங்கு செல்ல வேண்டும் என்று இதுவரை முடிவு செய்யவில்லை..
ஆமாம் பவித்ரா நீ எங்க தங்க போகிறாய் என்று சொல்லவே இல்லையே என்றான் ரித்திக் ..
"பரவாயில்லை இப்போதாவது கேட்டியே" என்றாள் பவித்ரா ஒரு சிறு புன்னகையோடு.நான் எனது உறவினர் வீட்டில் தங்க கோயம்புத்தூருக்கு போகிறேன், ஆமா நீ என்ன செய்யப் போகிறாய் ? என்றாள் .
அதை தான் நானும் யோசிக்கிறேன் இப்போதைக்கு என் நண்பனோடு சென்னையிலே தான் இருக்கப் போகிறேன் என்றான்.
" நீ எங்கேயும் இரு ஆனால் தினமும் தொலைபேசியில் மட்டும் அழைத்து விடு இல்லை என்றால் அவ்வளவு தான்" என்று தடித்த குரலில் சொன்னாள். அவன் எதையோ யோசித்துக்கொண்டு சரி என்று சொல்லி விட்டு விடுதிக்கு சென்றான் எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்காக..
டாக்டர் சரவணன் வீடு திரும்பினார். தற்போது தொலைபேசியை எடுத்து ரித்திக் யை அழைத்தார் " என்னப்பா என்ன முடிவு பண்ணிருக்கே எங்க தங்கப் போகிற என்றார் டாக்டர்.. நான் எனது நண்பனோடு சென்னையில் இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றான் ரித்திக்.
சரி நாளை காலை அபில்லோ மருத்துவமனை வா பேசிக் கொள்ளலாம் என்று தொலைபேசியை வைத்துவிட்டு தனது மடிக்கணினியை திறந்து வந்திருக்கக்கூடிய இமெயில்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
பின்பு வீடியோ காலில் லண்டன் மருத்துவர் ரேச்சர்ட் பேசத் தொடங்கினார்.. நிலைமை தற்போது எப்படி இருக்கிறது இந்த அளவில் ப்ராஜெக்ட் போய்க்கொண்டிருக்கிறது என்றார் டாக்டர் சரவணன்.
நன்றாக போய்க்கொண்டிருக்கிறது டாக்டர்.. இப்போதுதான் மத்த நாட்டில் உள்ள டாக்டர்களோட கான்பிரன்ஸ் கால் பேசினேன். நாம கிட்டத்தட்ட பக்கத்துல வந்துவிட்டோம் விரைவில் நல்ல முடிவு வரும்.. ஆமா நீங்க புதுசா ஒரு டாக்டர் நமக்கு டீம் ல சேர்க்கணும் ன்னு சொன்னீங்களே அது என்ன ஆச்சு டாக்டர்? என்று ரேச்சர்ட் கேட்க
நான் விரைவில் அவரை உங்கள் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு மற்றும் சில விசயங்கள் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார் டாக்டர் சரவணன் .
டாக்டர் சரவணன் தொலைபேசி ஒலித்தது டாக்டர் ஒரு ஆக்சிடெண்ட் கேஸ் இப்பதான் வந்தது இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பைக்ல அடிபட்டு இறந்து போய்விட்டான் போஸ்ட்மார்ட்டம் பண்ண பாடி வந்து இருக்கு என்று அரசு மருத்துவமனை யில் இருந்து வழக்கமாய் அழைக்கும் பியூன் மறுமுனையில் சொல்ல
15 நிமிடம் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு , வழக்கமாய் எடுத்துச்செல்லும் அந்த ரகசிய பெட்டியை எடுத்து கொண்டு மார்ச்சுவரி நோக்கி விரைந்தார் டாக்டர் சரவணன்...
கண்கள் திறக்கும் பக்கம் 10 ஆக
பொ.சசி குமார்