வாய் சவடால்

"வாய் சவடால் "

தொற்றா ?...
அது என்ன?....

எனக்கெல்லாம் வராது ....
எங்களை அது அணுகாது ....

எல்லாம் மாயை...
அரசியல் சூழ்ச்சி....

எப்போதும் சொல்வதைப் போல் ...
கார்ப்பரேட் சதி...
என்று சதா புலம்பினான்...

இன்று தொற்று வந்து...
மூச்சுத்திறன் குறைந்து
செயற்கை சுவாசம்
செலுத்தும் நிலையில் ...
கை சைகை செய்கிறான் ...

எழுதிக் காண்பிக்க
தாளைத் தந்தால் ...

"மீண்டும் வருவேன் ...
எல்லாம் மாயை...
என்னை மட்டும்
எப்படியாவது காப்பாற்றி
விடுங்கள்" என்று
எழுதிக் காண்பிக்கிறான்.

எழுதியவர் : PASALI (8-Jun-21, 11:49 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 74

மேலே