“எதற்காக இந்த அமைதி ”

“எதற்காக இந்த அமைதி? ”

அமைதி பூங்கா’போல் இருந்தது அந்த பள்ளிக்கூடம்.
ஆசிரியர்கள் இல்லாத ஒரு சில வகுப்பறைகளில், மாணவர்கள் சுயகட்டுப்பாடுடன் அமர்ந்திருப்பது ‘
எந்த இடத்தில் கூட்டம் என்று விசாரித்துக் கொண்டே, சக ஆசிரியர்களோடு பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். பொதுவாய் மனித இயல்புகளில் இதுவும் ஒன்றுதான் - விலங்குகள் போல் முதலில் அச்சம் கொண்டு, பின்பு பார்த்து பழகி நட்ப்போடு நலம் விசாரிப்பது,
நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வணக்கம் சொல்லி, ஒரு சிலருக்கு சிறியதாய் புண்ணகை செய்து- இடம் பார்த்து உட்கார்ந்தேன்.சிறிய சலசலப்புகளுக்கு பிறகு அமைதிப்பட்டது அந்த அறை.

கூட்டம் தொடங்கியது . ஆனால் முக்கிய விருந்தினர் வரவில்லை. ஆங்கிலம் தொடர்பாக ஆசிரியர்கள் விவாதித்து கொண்டிருந்தினர். மேடையில் பேசுபவர்கள் எதை பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினேன் . அத்தோடு கூட்டம் தொடர்பாக குறிப்பெடுத்தேன் . ஒரு முன்னூறு பேர் அமர்ந்திருக்கும் இடத்தில், ஒரு அதிகாரி கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் இடத்தில் அழைப்பு இல்லாமல் அவசரமாய் மேடை ஏறினேன்”

பறவைகள் கலையும் போதும், ஒன்றாய் கூடும்போதும் ஏற்படும் சலசலப்பு காணப்பட்டது.
அழைப்பில்லாமல் என் கருத்தை அவையில் சொல்லப்போகிறோம் என்ற அச்சமும் இல்லை . ஆனால் , பாடம் சம்மந்தமாக, மாணவர் சம்மந்தமாக எதோ ஒன்றை இந்த சபையில் பேசிஅனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக , சில நேரங்களில் இப்படிப்பட்ட “ சந்தர்ப்பங்களை நானாகவே உறுவாக்கிக் கொள்வேள்.

“வணக்கம்” என்று ஆரம்பித்தவுடன்...
“குறிப்புகள் அடங்கிய காகிதத்தோடு,நான் சொல்ல வந்த கருத்தை, மைக் முன்னால் நின்றுகொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாட பேசிக் கொண்டிருந்தேன்” எனக்கே ஆச்சர்யம். அவை முழுவதும் அமைதி . எந்த சலசலப்பும் இல்லை, கவணச் சிதறல்கள் இல்லை .எல்லோறும் எண்ணை பார்ப்பதுபோல் இருந்தது, என்பேச்சை உற்று கவனிப்பதுபோல் இருந்தது. இறுதியாய் நன்றி சொல்லிவிட்டு மேடையிறங்கி கம்பீரமாய் என் இடத்தில் வந்து உட்கார்ந்தேன்.
‘சார் நல்லா பேசினிங்க...’ என்று பக்கத்திலிருந்தவர் என் கையை உலுக்கினார்.
மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தபோது...
“வணக்கம் இப்போது, நமது கல்வி மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி அவர்கள் நம்மிடயே உறையாற்றுவார் “ என்று ஆசிரியர் ஒருவர் வரவேற்ப்பு கொடுத்தவுடன், எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் ஒரே ஒரு குழப்பம்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நான் பேசத் தொடங்கும் முன்பே வந்துவிட்டாரா அல்லது பேசி முடித்த பின்பு வந்தாரா`? என்று.
அமைதியாய் படபடப்பின்றி கூட்டத்தோடு கூட்டமாய் கல்லாய் அசைவின்றி நானும்.

எழுதியவர் : இரா.ரமேஷ் (12-Jun-21, 8:02 am)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 99

மேலே