பள்ளி
பள்ளி......!
பள்ளி
என்ற பக்கத்தில்
பதிவுசெய்த குறிப்புகள் ..!
இமைப்பொழுதில்
இடமாரும்
ஆசிரியர்கள் ..!
அந்த நொடிப்பொழுதில் ,
முகம்மலர்ந்து
சோர்வு நீங்கும் ..!
மேசையில்
உடல்சாய்த்து
உறங்கத்தோன்றும் ..!
அசைவின்றி
கண்கள் நிற்கும் ..!
வானத்தில் மனம்
ரெக்கைகட்டி பறக்கும் ..!
கரும்பலகை
எனக்கென காத்துக்கிடக்கும் ..!
ஒடிவரும்
ஒருசிலர் பார்த்து ,
ஓய்வெடுத்த அசதி
என்னை
ஆயத்தப்படுத்தம் ..!
இடமாறியவர்
யாரெனப் பார்த்து
வசதி கொஞ்சம்
வாய்ப்பெடுத்துக்கொள்ளும் ..1