வாழ்க்கை

குழவியது பிறந்தவுடன் அழுது பின்னே
தொட்டிலில் கிடத்தியவுடன் தூங்குகிறது
தூங்கும் குழந்தை கை விரலை
வையில் வைத்து சுவைக்கின்றது அதன்
இதழோரத்தில் சிரிப்பு.... அழுத குழந்தை சிரித்ததேன்....
ஏன் பிறந்தேனோ என்று அழுது
உறங்கிய குழந்தைக்கு இறைவன் காட்சி ஏன் பாதங்கள் பற்றி வாழ் உன்
வாழ்வில் துயர் ஏதும் வாராது....
நான் காத்திடுவேன் உறுதி என்றார் இறைவன்
இக்காட்சி கண்டு குழந்தைக்கு மனநிறைவு
பின் என்ன அழுகைப் போய் சிரிப்பு....

பிறப்பில் இறைவனைக் கண்டும்
பின்னே உலக மாயையில் சிக்கி
அவனை மறந்து விடுகிறோம்....
அதனால் சம்சார சாகரத்தில் நாம்
நீந்தி வரமுடியாத தவிப்பில்....


குழந்தை சிரிப்பில் கடவுள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jun-21, 5:33 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 165

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே